மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் அவர்களின் நல்லாட்சியில், மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
பெரம்பூர் சட்டமன்ற தொகுதி 45(அ) வட்டம் ரங்கநாதபுரம், சஞ்சய் நகர் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ரூ.19,00,000/-
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய பல்நோக்கு கட்டிடத்தை(நியாய விலை கடை)நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். கலாநிதி வீராசாமி முன்னிலையில் இன்று தொகுதி மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தோம்.
உடன்,உணவு பொருள் வழங்கல் துறை உதவி ஆணையர்,மாநகராட்சி உதவி பொறியாளர்,பகுதி செயலாளர் க.ஜெயராமன்
,மாவட்ட துணை செயலாளர்
எஸ்.ஆர்.கமலக்கண்ணன்,வட்ட செயலாளர்கள் கி.தினகரன், வி.முருகன்,கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

