பழைய வியாசர்பாடி பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் ரூ.34.61 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகளை பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர்.டி.சேகர் அவர்களின் முன்னிலையில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களுடன் திறந்து வைத்து பயனாளிகளிடம் வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது.

