மூர்த்திங்கர் நகர் திட்டப்பகுதி 2-இல், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.88.02 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 648 குடியிருப்புகளையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள கால்பந்து மைதானத்தையும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஆர்.டி.சேகர் அவர்களின் முன்னிலையில் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாண்புமிகு குறு, சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களுடன் திறந்து வைத்து ஒதுக்கீடு ஆணை மற்றும் விற்பனை பத்திரங்கள் வழங்கப்பட்டது.

