பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் ஆர்ஆர்நகர் பகுதியில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட 288 வீடுகள் மிகவும் பழுதடைந்து உள்ளதால் புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் சுமார் 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 வீடுகள் கட்டுவதற்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள குடியிருப்பில் வசிக்கும் அனைவருக்கும் புதியதாக கட்டப்பட இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும் வகையில் ஏற்கெனவே அதை குடியிருப்பில் உள்ளவர்களுக்கு கழ்காலி ஒதுக்கீட்டு ஆணை மற்றும் கருணைத் தொகையை எனது அலுவலகத்தில் வழங்கினேன்

